யாழ்ப்பாணத்தில் (Jaffna) பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை தவறான முறைக்குட்படுத்திய ஆசிரியர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது கோப்பாய் (Kopay) காவல்துறையினரால் நேற்றைய தினம் (22.01.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பாடசாலை ஒன்றில் 14 வயது மாணவி ஒருவர் தவறான முறைக்குட்படுத்தப்பட்டதாக காவல்துறையில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது
இதையடுத்து காவல்நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய 52 வயதான குறித்த ஆசிரியர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.