யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியில் தீ விபத்துக்குள்ளான ஆசிரியர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (11) காலை அவர் உயிரிழந்துள்ளார்.
43 வயதான நிஷாந்தினி நித்திலவர்ணன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ் போதனா வைத்தியசாலை
வீட்டில் நேற்று (10) ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த குறித்த பெண் பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் யா/ஹாட்லிக்கல்லூரியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றுகின்றார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேதிக விசாரணைகளை பருத்தித்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
