Home இலங்கை அரசியல் மகிந்தவிற்கு சத்திரசிகிச்சை

மகிந்தவிற்கு சத்திரசிகிச்சை

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் தனியார் மருத்துவமனையொன்றில் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சத்திரசிகிச்சையின் பின்னர் அவர் அம்பாந்தோட்டைக்குச் செல்லாது தனது பிள்ளைகளின் வீடுகளில் தங்கியிருப்பதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மகிந்தவின் உடல்நிலை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த தற்பொழுது குணமடைந்து வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மகிந்த அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்து.

     

ராஜபக்ச குடும்பத்தின் 80 ஆண்டுகால அரசியலை குறிக்கும் நிகழ்வு ஒன்று அண்மையில் நடைபெற்றது. இந்த நிகழ்விலும் மகிந்த பங்கேற்கவில்லை.

உடல்நிலையை கருத்திற்கொண்டு மகிந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க, கோட்டாபய மற்றும் மைத்திரி போன்றவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். 

NO COMMENTS

Exit mobile version