யாழ். போதனா வைத்தியசாலையின் (Teaching Hospital Jaffna) பிரதம கணக்காளருக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அவர் பதவி உயர்வு பெற்று அநுராதபுர மாவட்ட செயலக பிரதம கணக்காளராக நியமனம்
பெற்று செல்வதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து
சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 5 வருடங்களாக சிவரஞ்சன் சிறப்பாக கடமையாற்றி இந்த பதவி உயர்வை
பெற்று செல்கின்றார் வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குறித்த பதவிக்கு வேறொருவர்
நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.
You may like this
https://www.youtube.com/embed/9lp1F3Vchmc
