Home முக்கியச் செய்திகள் ஈடு செய்யப்பட முடியாத பேரிழப்பு: சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் திடீர் மறைவுக்கு கஜேந்திரன் இரங்கல்

ஈடு செய்யப்பட முடியாத பேரிழப்பு: சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் திடீர் மறைவுக்கு கஜேந்திரன் இரங்கல்

0

சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் சுதர்சன் மறைவிற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (S. Kajendran) இரங்கல் தெரிவித்துள்ளார்.

சத்திர சிகிச்சை வைத்திய நிபுணரான வைத்தியர் சுதர்சன் மாரடைப்பு காணரமாக நேற்று (15) கொழும்பில் காலமானார்.

இது தொடர்பில் செல்வராசா கஜேந்திரன் தனது உத்தியோகப்பூர்வ முகப்புத்தகத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

சத்திர சிகிச்சை 

குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் சுதர்சன் திடீர் மறைவுச் செய்தியறிந்து பேரதிர்ச்சியடைகின்றோம்.

அவரது இழப்பு மருத்துவ உலகிற்கு ஈடு செய்யப்பட முடியாத பேரிழப்பு.

அவரது மறைவுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version