யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் (Base Hospital Tellippalai )இடம்பெற்ற மோசடி தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் உரிய முறையில் முறைப்பாடு செய்தும் இரு வைத்தியர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றைய (19) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கும் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “வடக்கு மாகாணத்தில் புற்றுநோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரேயொரு வைத்தியசாலையாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை இருக்கின்றது.
இந்த வைத்தியாலையில் பொருளாளர் ஒருவர் கடமையாற்றுவதில்லை. இந்த வைத்தியசாலை நேரடியாக பிராந்திய வைத்தியசாலை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் கேதீஸ்வரனின் கீழும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சமன் பத்திரணவின் கீழும் நிர்வகிக்கப்பட்டு மத்திய அரசால் நிர்வகிக்கப்படுகின்றது.
இந்த வைத்தியசாலையில் புற்றுநோய் பிரிவில் பொறுப்பு வைத்தியராக கடமை புரியும் வைத்தியர் கிருசாந்தி வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவிற்கான தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல்களை செய்துகொண்ட வங்கி கணக்கு புத்தகங்கள் இரண்டு பிடிபட்டிருக்கின்றது. அதை என்னால் நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க முடியும்.
அத்துடன் வைத்தியர் கேதீஸ்வரன் புற்றுநோய் பிரிவிற்கான மாகாண பொதுச்செயலாளரின் அனுமதியின்றி 30 மில்லியன் பெறுமதியான கட்டிட ஒப்பந்தம் ஒன்றை முறையற்ற விதத்தில் மேற்கொண்டிருப்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் முறைப்பாடு அளிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் கடந்த பின்னும், சுகாதார அமைச்சின் ஊடாகவும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு ஊடாகவும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.”என தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் அர்ச்சுனா 8 கேள்விகளை கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தெண்டாயுதபாணி உற்சவம்
https://www.youtube.com/embed/tL5j5wOd690
