Home இலங்கை அரசியல் யாழ்.தையிட்டி விவகாரம் : என்.பி.பி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கே..!

யாழ்.தையிட்டி விவகாரம் : என்.பி.பி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கே..!

0

யாழ்ப்பாணத்தில் மக்கள் போராட்டம் இடம்பெறும் இடங்களில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கே என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட இணைப்பாளர் சுரேஷ் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

லங்காசிறியின் அரசியல் களம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தையிட்டியில் விகாரை தொடர்பான பிரச்சினைக்கு முதற் காரணம் தனியார் காணியில் கட்டப்பட்டமையே ஆகும். அது தமிழர்களுடைய பூர்வீக நிலம்.

ஆனால் இன்று உள்ள அரசாங்கம் இந்த விகாரைக்கு என்ன நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

மாற்று காணிகளை வழங்குவதாக குறிப்பிட்டுள்ளது.எனினும் அந்த விவகாரம் குறித்து காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடலை மேற்கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் பல விரிவான விடயங்களையும் சமகால அரசியல் விடயங்கள் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்….

NO COMMENTS

Exit mobile version