Home இலங்கை சமூகம் யாழ். திருவள்ளுவர் கலாசார மையம் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கருத்து

யாழ். திருவள்ளுவர் கலாசார மையம் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கருத்து

0

யாழ்ப்பாணம் – திருவள்ளுவர் கலாசார மையம் அமைந்துள்ள நிலப்பரப்பு யாழ்.
மாநகரசபையின் சொத்து. அது ஒரு சந்தர்ப்பத்திலும் இன்னொரு தரப்பினருக்கு
வழங்கப்படவில்லை என யாழ். மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா
தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகரின் மாதாந்த அமர்வு இன்று முதல்வர் மதிவதனி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது யாழ். மாநகருக்கு உரித்தான காணி நிலங்கள், கட்டடங்கள் என்பன அரச
நிறுவனங்களுக்கு வழங்குவதில்லை என யாழ். மாநகரசபையில் தீர்மானம்
எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈ.பி.டி.பியின் உறுப்பினர் இளங்கோ (றீகன்) முன்பள்ளி ஒன்றின்
கட்டுமாண விடயத்துக்கு காணி வழங்குவது அவசியம் என்றும் அது தொடர்பில் அவதானம்
செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

எடுக்கப்பட்ட தீர்மானம்

இவ்விடயம் தொடர்பில் உறுப்பினர் தர்சானந்த், அரசின் எந்த தரப்பினருக்கும்
கணியோ, கட்டிடங்களோ வழங்க முடியாது.
அவ்வாறான ஆதனங்களை வழங்குவதாயின் சபையின் அதிகாரத்தின் கீழ் அவற்றை கொண்டு,
வாடகைக்கு வழங்க வேண்டும்.

குறிப்பாக அரச கட்டமைப்பான கிராம சேவகர்,
சமுர்த்தி, பொருளாதார உத்தியோகத்தர் போன்ற தரப்பினருக்கு வழங்குவதாயின் வாடகை
அறவிடுவது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

இதன்போது மாநகரின் மேலும் பல்வேறு காணிகளின் தொடர்பில் விவாதிக்கப்பட்ட போது
குறித்த காணி இன்னொரு நாட்டுக்கு கொடுக்கப்பட்டதான கருத்துப்பட உறுப்பினர்
ஒருவர் விமர்சனம் முன்வைத்தபோதே அவர் இவ்வாறு மீள் நினைவூட்டிச்
சுட்டிக்காட்டினார்.

அதேநேரம் சபையின் ஆழுகையின் கீழ் இருக்கும் காணிகள் கட்டடங்களை, தனியாருக்கு
வழங்க முயற்சிப்பின் ஆட்சி அதிகாரத்தை, யாழ். மாநகரசபையின் ஆதிக்க வரையறைக்குள்
கொண்டு, கால எல்லையின் அளவில் அவ்வாறு கோரும் தரபினருக்கு ஒப்பந்த
அடிப்படையிலோ, வாடகை அடிப்படையிலோ சபையின் முடிவுடன் வழங்க முடியும் என்றும்
பொதிமுறையொன்றை உறுப்பினர் யோகேஸ்வரி சுட்டிக்காட்டிய நிலையில் அவ்விடயம் சபையில் உறுப்பினர்களால் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version