Home இலங்கை சமூகம் யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை : வெளியான தகவல்

யாழ்ப்பாணம் – சென்னை விமான சேவை : வெளியான தகவல்

0

இந்தியாவின் (India) சென்னையிலிருந்து (Chennai) –  யாழ்ப்பாணம் பலாலி (Jaffna) வரை முன்னெடுக்கப்பட்டு வரும் விமான சேவைகளை மேலும் அதிகரிப்பதற்கு இந்திய விமான நிறுவனமான இண்டிகோ (IndiGo) தீர்மானித்துள்ளது.

இண்டிகோ விமான நிறுவன அதிகாரிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனுக்கும் (Nagalingam Vedanayagan) இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான சேவை

தற்போது, இண்டிகோ விமான நிறுவனத்தின் ஊடாக சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே வாரத்திற்கு ஐந்து நாட்களுக்கு ஒரு விமானத்தை இயக்குகிறது.

இந்தநிலையில், எதிர்காலத்தில் மேலும் இரண்டு விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version