Home முக்கியச் செய்திகள் அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக பாயப்போகும் சட்டம்!

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக பாயப்போகும் சட்டம்!

0

யாழ்ப்பாணத்தில் நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக சட்டம் நடைமுறைபடுத்தப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது செய்யப்படமாட்டாரா? அல்லது காவல்துறை அதற்கு அஞ்சுகிறதாக என கேட்கப்பட்ட கேள்விக்கு காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க இவ்வாறு பதில் அளித்தார்.

சட்டநடவடிக்கை

“நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் அவருக்கு எந்த சிறப்பு சலுகைகளையோ அல்லது சட்டத்திலிருந்து விலக்குகளையோ வழங்கப்படாது, அவர் மிக உயர்ந்த நிறுவனத்தின் உறுப்பினர் ஒருவர்.

அவரது நடத்தைகள் மிகவும் மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும். அதைத்தான் பொதுமக்களும் எதிர்பார்க்கிறார்கள்.எனவே அவர் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை அவர் தீர்மானிக்க வேண்டும்.

எனினும், அவர் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டால், நாங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்.குறித்த சம்பவம் தொடர்பில் எதிர்வரும் காலத்தில் காவல்துறை சட்டநடவடிக்கை எடுக்கும்” என்றார்.    

https://www.youtube.com/embed/f3XnE1aSoY0

NO COMMENTS

Exit mobile version