Home முக்கியச் செய்திகள் யாழ். கொழும்பு இரவு தொடருந்து சேவை : வெளியான அறிவிப்பு

யாழ். கொழும்பு இரவு தொடருந்து சேவை : வெளியான அறிவிப்பு

0

கொழும்பு கோட்டை (Fort) தொடக்கம் காங்கேசன்துறைக்கிடையிலான (Kankesanturai) இரவு தபால் தொடருந்து சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  தொடருந்து திணைக்களம் (Railway Department – Sri Lanka) தெரிவித்துள்ளது.

குறித்த தொடருந்து சேவையானது நேற்று (31.01.2025) இரவு முதல் தனது சேவையை ஆரம்பித்துள்ளது.

தொடருந்து திணைக்களம்

அதன்படி, கொழும்பு கோட்டை  தொடருந்து நிலையத்திலிருந்து இரவு 8.00 மணிக்குப் புறப்படும் இந்த தொடருந்து, மறுநாள் அதிகாலை 4.35 மணிக்கு காங்கேசன்துறை தொடருந்து நிலையத்தை வந்தடையும் என்று தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் காங்கேசன்துறை தொடருந்து  நிலையத்திலிருந்து இரவு 8.00 மணிக்குப் புறப்படும் இந்த தொடருந்து, மறுநாள் அதிகாலை 4.40 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version