Home இலங்கை அரசியல் ஐந்து ஆண்டுகளுக்குள் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி: அநுரகுமாரவின் நம்பிக்கை

ஐந்து ஆண்டுகளுக்குள் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி: அநுரகுமாரவின் நம்பிக்கை

0

தனது அரசாங்கத்தின் முதல் ஐந்து ஆண்டு காலப்பகுதிக்குள், யாழ்ப்பாணத்தில் ஒரு
சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்தப்படும் என்று தாம் நம்புவதாக, ஜனாதிபதி
அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில்(Jaffna), தேசிய மக்கள் சக்தி தேர்தல் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி,

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூரியாவுடனான அண்மைய
சந்திப்பின் போது இந்த யோசனையை தாம் முன்வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டி 

யாழ்ப்பாணத்தில் ஒரு சர்வதேச மைதானத்தை அமைப்பதும், இலங்கையை
பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் வீரர்களை ஒன்றாகப்
பார்ப்பதும் தனது தொலைநோக்குப் பார்வையில் அடங்கும் என்றும் ஜனாதிபதி
தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் சர்வதேச மைதானத்துக்காக, மண்டைத்தீவில் முன்மொழியப்பட்ட இடத்தை
ஆய்வு செய்வதற்காக ஜெயசூரிய விளையாட்டு அமைச்சர் சுனில் கமகேவுடன் அண்மையில்
யாழ்ப்பாணத்துக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.

ஏற்கனவே மைதானத்துக்கான நிலமும் அடையாளம் காணப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ளது
தற்போது நிதியைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என்றும்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version