Home முக்கியச் செய்திகள் வடக்கில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வடக்கில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (12) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

பலத்த காற்று

மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா,மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுமெனவும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.      


YOU MAY LIKE THIS


https://www.youtube.com/embed/n0F8-QdXWBwhttps://www.youtube.com/embed/6A1mF5dwSiA

NO COMMENTS

Exit mobile version