Home இலங்கை அரசியல் வடக்கு மாகாண சபை தொடர்பில் யாழ்.பல்கலை துணைவேந்தர் கருத்து..!

வடக்கு மாகாண சபை தொடர்பில் யாழ்.பல்கலை துணைவேந்தர் கருத்து..!

0

வடக்கு மாகாண சபை இல்லாமல் இருப்பது சிறப்புபோல் இருக்கின்றது எனவும், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் கூச்சலிடுவதை போல மாகாணசபை இருந்தாலும் அங்கும் கூச்சலிட்டுக்கொண்டுதான் இருப்பார்கள் என  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே இவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

 வடக்கு மாகாண ஆளுநர்

“ வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் 1984ஆம் ஆண்டு காலத்தில் யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகத்தில் படித்தவர்.

அவர் படித்த காலம் மிக நெருக்கடியானது.
அதைப்போலத்தான் அவர் பணிக்குச் சேர்ந்த 1991ஆம் ஆண்டு காலமும்
நெருக்கடியானது.

வடக்கு மாகாணத்தில் உள்ள அதிகாரிகள் கடமையுணர்வுமிக்கவர்கள். வடக்கு
மாகாணத்தின் பலமே அவர்கள்தான்.

அரசியல்வாதிகளை கொழும்பிலிருந்து கொண்டுவரும் ஒரு காலம் இருந்தது. எங்களால் செய்ய முடியாது
என்ற எண்ணம் இனியாவது மாற்றப்படவேண்டும்” என்றார். 

NO COMMENTS

Exit mobile version