Home முக்கியச் செய்திகள் யாழிலிருந்து 25 மாவட்டங்களுக்கு நடைபயணத்தை ஆரம்பித்த இளைஞன்!

யாழிலிருந்து 25 மாவட்டங்களுக்கு நடைபயணத்தை ஆரம்பித்த இளைஞன்!

0

இனமத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையிலும் யாழ்ப்பாணத்திலிருந்து (Jaffna) இருந்து இளைஞன் ஒருவர் நடைபயணம் ஒன்றினை ஆரம்பித்துள்ளார்.

குறித்த நடைப்பயணம் நேற்று (10.08.2024) மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சிவானந்தன் பவிஸ்ரன் என்ற இளைஞனே இவ்வாறு யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தில் இருந்து இந்த நடைபயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இனமத நல்லிணக்கம்

இவர் இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களுக்கும் நடந்தே தனது பயணத்தை முன்னெடுக்கவுள்ளார்.

அத்துடன், மாவட்டங்களின் முக்கிய இடங்களில் மரக்கன்றுகளையும் நாட்டவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/jaffna-youth-begins-walk-for-harmony-1723335761?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version