Home இலங்கை சமூகம் யாழில் இடம் பெற்ற விபத்தில் இளைஞன் படுகாயம்!

யாழில் இடம் பெற்ற விபத்தில் இளைஞன் படுகாயம்!

0

யாழ்ப்பாணம் (Jaffna) – வட்டுக்கோட்டை பகுதியில் ஹயஸ் ரக வாகனம் மோதியதில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது, வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட அராலி (Araly)  பாலத்திற்கு அண்மித்த பகுதியில் நேற்றிரவு (08.09.2024) இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து தொடர்பில் தெரியவருகையில், அராலி கிழக்கு, வட்டுக்கோட்டையை சேர்ந்த 29 வயதுடைய லோகேநாதிரம் கஜேந்திரன் என்ற இளைஞரே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றது.

யாழில் விபத்து

ஓட்டுமடம் பக்கத்தில் இருந்து வட்டுக்கோட்டை பக்கமாக வந்த ஹயஸ் ரக வாகனம் ஒன்று வீதியை கடக்க முற்பட்ட இளைஞன் மீது மோதியுள்ளது.

அதனை தொடர்ந்து விபத்துக்குள்ளாகிய இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version