Home இலங்கை அரசியல் பாதாள குழுவினருடன் எனக்கு எவ்வித தொடர்புமில்லை.. மனம் திறந்த ஜகத் விதான

பாதாள குழுவினருடன் எனக்கு எவ்வித தொடர்புமில்லை.. மனம் திறந்த ஜகத் விதான

0

மத்துகம சானுக்கும் எனக்கும் எவ்வித குரோதமும் இல்லை. அதற்கான எவ்வித கொடுக்கல் வாங்கலும் மேற் கொள்ளப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தெரிவித்துள்ளார்.

மத்துகம ‘சான்’ என்பவர் கெஹல்பத்தர பத்மேவின் நண்பர். செவ்வந்தி மதுகமவில் தங்கியிருப்பதற்கான உதவி செய்தவரும் அவரே.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நான், இன்று பத்திரிகைகளை பார்க்கும் போது அதிர்ச்சியடைந்தேன். நான் பாதாள குழுக்களுடன் தொடர்பு வைத்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் உத்தியோகப்பூர்மாக அறிவித்துள்ளார்.

 சட்ட நடவடிக்கை

அது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் ஜகத் வீரசூரியவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போகிறேன். பொலிஸ் மா அதிபரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தனக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதுவும் ‘மத்துகம சான்’ தன்னை கொலை செய்வதாக புலனாய்வு தகவல் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் இது குறித்து இன்று கதைக்கும் போது கூட எனக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் பாதுகாப்பும் அகற்றப்படலாம். நான் உயிர் பயத்தில் இங்கு வரவில்லை. எனக்கு நடந்துள்ள அசாதாரணத்தை பேசவே இங்கு வந்துள்ளேன்.

எனக்கு மோசடி வியாபாரத்தில் தொடர்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நான் 1986ஆம் ஆண்டு வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளேன். அதிகம் வரி செலுத்துபவர்கள் பட்டியலில் நானும் ஒருவராவேன் என்றார். 

NO COMMENTS

Exit mobile version