நடிகர் ரஜினியின் அடுத்த படம் ஜெயிலர் 2 மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜெயிலர் முதல் பாகத்தை போலவே மற்ற மொழி ஹீரோக்களை ஜெயிலர் 2ல் நடிக்க வைக்க இருக்கின்றனர்.
தெலுங்கில் மாஸ் ஹீரோவாக இருக்கும் நடிகர் பாலைய்யா தற்போது இந்த படத்தில் இணைந்து இருக்கிறார்.
சம்பளம்
ஜெயிலர் 2ல் நடிக்க அவர் 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்து இருப்பதாகவும், அதற்காக அவருக்கு 50 கோடி சம்பளமாக தரப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அவரது சம்பளம் பற்றிய தகவல் சினிமா துறை வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
