Home சினிமா ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்.. அவரே கூறிய விஷயம்

ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிரபல நடிகர்.. அவரே கூறிய விஷயம்

0

ஜெயிலர் 2

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக ஜெயிலர் வலம் வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷ்ராஃப் ஆகியோர் நடித்திருந்தனர்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் 2 – ம் பாகம் உருவாகி வருகிறது. அந்த வகையில், படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

த்ரிஷா, சிம்ரன் இருக்கட்டும்.. ரெட்ரோ படத்தில் இணைந்த பிரபல நடிகை.. செம வைப் தான்

 பிரபல நடிகர்

முதல் பாகத்தை போல ‘ஜெயிலர் 2’ படத்திலும் மோகன் லால், சிவராஜ்குமார் ஆகியோர் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக இணையத்தில் தொடர்ந்து செய்திகள் உலா வந்தது.

இந்நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சிவராஜ்குமார் ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.   

NO COMMENTS

Exit mobile version