முன்னாள் போராளியான கருணா, அண்மையில் ஊடகவியலாளர் ஒருவர் தொடர்பில் வெளியிட்டிருந்த சர்ச்சைக்குரிய கருத்து தமிழர் தரப்பில் பேசுபொருளாகியுள்ளது.
முந்தைய காலத்தில் கருணா உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டிருந்த பல்வேறு கொடூர சம்பவங்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கே அவர் இந்த எதிரொலியை எழுப்பியிருந்தார்.
யுத்த காலத்தில், தமிழீழ விடுதலை புலிகளுடனான போராட்டத்தில் கருணா உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டிருந்த அட்டகாசங்கள் பல.
அக்காலகட்டத்தில் பல்வேறு, தமிழர் தரப்பின் ஆதரவாளர்கள் இரக்கமின்றி தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். மட்டக்களப்பில் மறைந்திருந்து இந்த சம்பவங்களை உலகுக்கு அம்பலப்படுத்திக் கொண்டிருந்த ஊடகவியலாளர்களுக்கும் கூட அதே நிலைமை தான்.
கருணா உள்ளிட்ட குழு பற்றி வெளிவராத பல்வேறு உண்மைச் சம்பவங்களை அம்பலப்படுத்தும் வகையில் வருகின்றது ஐபிசி ஊடகத்தின் உண்மைகள் நிகழ்ச்சி,
