இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கை விஜயம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி பிற நாடுகள் மற்றும் சர்வதேச வங்கிகளிடம் இருந்து புதிதாக கடன் பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டது.
இதையடுத்து இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இலங்கைக்கு கடன் நாடுகளுக்கும் இடையே கடந்த ஜூலையில் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை மேற்கொள்ளபட்டது.
ஜெய்சங்கரின் விஜயம்
இந்நிலையில், இலங்கை ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், கடந்த அக்டோபர் 4ஆம் திகதி இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதனை தொடர்ந்து, ஜெய்சங்கரின் வருகை தொடர்பில் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்,
“இலங்கையின் சர்வதேச கடன் பத்திரங்களை வைத்திருப்போருடன் கடன் மறுசீரமைப்பை முடிவுக்குக் கொண்டுவந்ததில் ஜெய்சங்கரின் விஜயம் முக்கியத்துவம் வாய்ந்தது.
அத்துடன், இலங்கையில் அதானி முதலீட்டு திட்டங்கள் உள்பட இந்திய திட்டங்கள் குறித்து ஜெய்சங்கருடன் ஆலோசிக்கப்படவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இலங்கையில் தனது தலைமையிலான தேசிய மக்கள் சக்தி முன்னணி ஆட்சிக்கு வந்தால், அதானி காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் ரத்து செய்யப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.