Home சினிமா ஜனநாயகன் படம் எவ்வளவு வசூல் செய்தால் ஹிட்டாகும்? முழு விவரம் இதோ

ஜனநாயகன் படம் எவ்வளவு வசூல் செய்தால் ஹிட்டாகும்? முழு விவரம் இதோ

0

ஜனநாயகன்

தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. வருகிற டிசம்பர் 27ஆம் தேதி மலேசியாவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடக்கவிருக்கிறது.

விஜய்யின் படம் என்றால் சாதாரணமாகவே பிசினஸ் வேற லெவலில் இருக்கும் என்பதை அனைவரும் அறிவோம். அதிலும் அவருடைய கடைசி படம் என்றால் சொல்லவே தேவையில்லை.

ஜீ தமிழ் சூப்பர்ஹிட் சீரியலில் களமிறங்கும் நடிகர் பப்லு பிரித்விராஜ்.. வெளிவந்த மாஸ் புரோமோ வீடியோ

இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் OTT உரிமை, ஆடியோ உரிமை, வெளிநாட்டு உரிமை, தமிழக உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகள் விற்பனை ஆகிறது. இதில் சாட்டிலைட் உரிமை மட்டும் இதுவரை விற்பனை ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வளவு வசூல் செய்தால் ஹிட் 

ஜனநாயகன் படத்தின் உரிமைகள் மாபெரும் விலைக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தாலும், அதை விட இரண்டு மடங்கு வசூல் செய்தால் மட்டுமே அந்தந்த ஏரியாக்களில் இப்படம் ஹிட்டாகும். அப்படி ஜனநாயகன் படம் எந்தெந்த ஏரியாக்களில் எவ்வளவு வசூல் செய்தால் ஹிட்டாகும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ரூ. 220 கோடி வசூல் செய்தால் ஹிட்

வெளிநாடுகளில் ரூ. 215 கோடி வசூல் செய்தால் ஹிட்

ஆந்திரா / தெலுங்கானாவில் ரூ. 20 கோடி வசூல் செய்தால் ஹிட்

கர்நாடகாவில் ரூ. 30 கோடி வசூல் செய்தால் ஹிட்

கேரளாவில் ரூ. 35 கோடி வசூல் செய்தால் ஹிட்


மொத்தம் ஜனநாயகன் படம் உலகளவில் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்தால் ஹிட்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version