விஜய்யின் ஜனநாயகன் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில வாரங்களே இருப்பதால் படத்தை தியேட்டரில் பார்ப்பதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு அவர் திமுகவை அதிகம் விமர்சித்து வரும் நிலையில், ஜனநாயகன் சாட்டிலைட் உரிமையை வாங்க சன் டிவி முயற்சி கூட செய்யவில்லை என கூறப்படுகிறது.
அதன் பின் சாட்டிலைட் உரிமையை வாங்க ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவி ஆகியோர் இடையே தான் போட்டி இருந்ததாகவும் கூறப்பட்டது.
ஜீ தமிழ்
தற்போது ஜீ தமிழ் சேனல் தான் ஜனநாயகன் சாட்டிலைட் உரிமையை வாங்கி இருக்கிறது.
அதற்காக 64 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறதாம் சேனல்.
பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் மற்றொரு படமான பராசக்தியின் OTT உரிமையை ஜீ நிறுவனம் தான் வாங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு 52 கோடி ரூபாய் வியாபாரம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
