Home சினிமா தெலுங்கில் ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் தீர்ந்தது.. படத்தை வாங்கிய முன்னணி நிறுவனம்

தெலுங்கில் ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் தீர்ந்தது.. படத்தை வாங்கிய முன்னணி நிறுவனம்

0

விஜய்யின் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆக இன்னும் சுமார் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கிறது. பொங்கல் ஸ்பெஷலாக வரும் ஜனவரி 9ம் தேதி ஜனநாயகன் ரிலீஸ் ஆகும் நிலையில் ரசிகர்கள் அந்த படத்தை பார்க்க வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

மேலும் விஜய்யின் கடைசி படம் இது என்பதாலும், பொங்கலுக்கு தொடர் விடுமுறை என்பதாலும் ஜனநாயகன் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

தெலுங்கு ரிலீஸ்

தெலுங்கில் ஜனநாயகன் படத்தை முதலில் ரிலீஸ் செய்ய இருந்த சித்தாரா நிறுவனம் திடீரென கடைசி நேரத்தில் வெளியேறிவிட்டது. அதனால் சொன்ன தேதியில் ஜனநாயகன் தெலுங்கில் ரிலீஸ் ஆகுமா என்பது கேள்விக்குறியாக இருந்தது.

மேலும் பொங்கலுக்கு தெலுங்கிலும் அதிகம் படங்கள் வருவதால் தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.

தற்போது PVR Inox நிறுவனம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா உரிமையை வாங்கி இருப்பதாக தயாரிப்பாளர் அறிவித்த இருக்கிறார்.

அதனால் ரிலீஸ் சிக்கல் தீர்ந்து வரும் ஜனவரி 9ம் தேதி ஜனநாயகுடு படம் தெலுங்கில் ரிலீஸ் ஆகிறது.  

NO COMMENTS

Exit mobile version