Home சினிமா முன்பதிவில் ஜனநாயகன் படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம்

முன்பதிவில் ஜனநாயகன் படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் விவரம்

0

ஜனநாயகன்

இயக்குநர் ஹெச். வினோத் – தளபதி விஜய் கூட்டணியில் உருவாகி 2026 ஜனவரி 9ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் மிகவும் ஸ்பெஷலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பிக் பாஸ் 9 தெலுங்கு டைட்டில் வின்னர் இவர் தான்! பரிசு தொகை எவ்வளவு லட்சம் தெரியுமா?

இதுவரை இப்படத்திலிருந்து வெளிவந்த இரண்டு பாடல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளன. மேலும் வருகிற 27ஆம் தேதி மலேசியாவில் பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இதனை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

முன்பதிவு வசூல்

இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் முன்பதிவு வெளிநாட்டில் தொடங்கிவிட்டது. இதுவரை நடந்துள்ள முன்பதிவில் மட்டுமே ரூ. 3.8 கோடி வசூல் வந்துள்ளது. ரிலீஸுக்கு முன்பாக முன்பதிவில் மாபெரும் வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version