ஜனநாயகன்
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நாயகனாக இருப்பவர் விஜய்.
ஒவ்வொரு படத்திலும் படத்தின் வியாபாரம், பாக்ஸ் ஆபிஸ் என உயர்ந்து கொண்டே வர விஜய்யின் மார்க்கெட் எங்கேயோ சென்றது. ரூ. 300 கோடி சம்பளம் பெற்ற நாயகனாக வலம் வந்தவர் ஜனநாயகன் படத்தோடு சினிமாவில் நடிப்பதை நிறுத்த இருக்கிறார்.
எச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெட்ச், பாலிவுட் நடிகர் பாபி தியோல் என பலர் நடிக்கும் இந்த ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு செம வேகமாக நடந்து வருகிறது.
பெரிய பிரச்சனையில் சிக்கப்போகும் விஜயா, காரணமே ரோஹினியா.. சிறகடிக்க ஆசை புரொமோ
ரீமேக் உரிமை
இந்த நிலையில் ஜனநாயகன் படக்குழு ஒரு தெலுங்கு படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியிருப்பதாக ஒரு தகவல் வலம் வருகிறது.
அதாவது தெலுங்கில் பாலய்யா நடிப்பில் வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் ஜனநாயகன் படம் என கூறப்படுகிறது.
அந்த படத்தில் இடம்பெறும் குட் டச் பேட் டச் காட்சியை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதால் அந்த ஒரே காட்சிக்காக மொத்த படத்தின் உரிமையை வாங்கியுள்ளதாகவும் ஒரு தகவல் வலம் வருகிறது.
பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் உரிமையை ஜனநாயகன் படக்குழுவினர் சுமார் 4.5 கோடி கொடுத்து வாங்கியுள்ளனராம்.
