Home சினிமா எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்… ஜனனி ஓபன் டாக்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை எப்படி தூக்கினேன், காட்சியை எப்படி எடுத்தார்கள்… ஜனனி ஓபன் டாக்

0

எதிர்நீச்சல் தொடர்கிறது

சன் தொலைக்காட்சியில் அதிரடி திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.

இத்தனை நாள் பெண்களுக்கு ஆட்டம் காட்டி வந்த குணசேகரனை ஓட வைத்துள்ளனர் அவரது வீட்டிப் பெண்கள். சக்தியை கடத்தி வைத்து ஜனனியை வெளியே அனுப்பி காரியத்தை சாதிக்க நினைத்த குணசேகரனுக்கே இப்போது பிரச்சனை திரும்பியுள்ளது.

Heart Beat வெப் தொடர் இயக்குனர் யார் தெரியுமா?… விஜய் டிவி சீரியல் நடிகரின் மகன் தானா…

குணசேகரன் மீது குண்டாஸ் சட்டம் விழும் அளவிற்கு மிகவும் Strong ஆன வழக்கு போடப்பட்டுள்ளது, இதனால் தலைமறைவாகியுள்ளார். பெண்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேற சொந்த தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்கள்.

நடிகை பேட்டி

சமீபத்தில் ஜனனியாக நடித்துவந்த பார்வதியிடம் ஒரு பேட்டியில், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் சக்தியை காப்பாற்றும் போது அவரை தோழில் தூக்கிக்கொண்டு செல்வார்.

அந்த காட்சி எப்படி எடுத்தார்கள், எப்படி சக்தியை தூக்கினீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு அவர், எனக்கே தெரியவில்லை, தென்காசியில் தான் படப்பிடிப்பு நடத்தினோம். அவர் சுய நினைவில் இல்லாமல் இருப்பார் அவரை வெளியே கொண்டு வர வேண்டும்.

அவரை தூக்கும் அளவிற்கு எனக்கு சக்தி உள்ளதா என தெரியாது. அவரை தூக்கிவிட்டேன், உடனே ஷாட் போனால் என அப்படியே படப்பிடிப்பு நடத்திவிட்டோம் என கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version