Home சினிமா குழந்தை பெற்றுக்கொள்வதில் நடிகை ஜான்வி கபூருக்கு இப்படியொரு ஆசையா?…

குழந்தை பெற்றுக்கொள்வதில் நடிகை ஜான்வி கபூருக்கு இப்படியொரு ஆசையா?…

0

ஜான்வி கபூர்

இந்திய சினிமாவில் 80களில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் ஸ்ரீதேவி.

இவர் இப்போது நம்முடன் இல்லை, ஆனால் தனது படங்கள் மூலம் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்.

இவரது மூத்த மகள் ஜான்வி கபூர், ஸ்ரீதேவி இருக்கும் போதே தடக் என்ற தனது முதல் படத்தில் நடிக்க துவங்கிவிட்டார், ஆனால் படம் ரிலீஸ் ஆவதற்குள் ஸ்ரீதேவி இறந்துவிட்டார்.

ஜான்வி கபூர் தனது அம்மாவை போன்று சினிமாவில் முழு ஈடுபாடு காட்டி நடித்து வருகிறார். அண்மையில் இவரது நடிப்பில் Param Sundari என்ற படம் வெளியானது, நல்ல விமர்சனமும் படத்திற்கு கிடைத்துள்ளது.

என்னைப் பற்றி வரும் அந்த தகவல் உண்மையில்லை… வதந்திக்கு மகாநதி சீரியல் நடிகை லட்சுமி ப்ரியா பதிவு

நடிகை பேட்டி

இப்பட புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஜான்வி கபூர் பேசும்போது, எனக்கு 3 குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது.

அதற்கு காரணம் 3 என்னோட லக்கி நம்பர், இரண்டாவது காரணம், 2 குழந்தைகள் இருந்தால் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்வார்கள்.

3வது குழந்தை இருந்தால் அவர்களை சண்டை போடாமல் பார்த்துக் கொள்ள உதவியாக இருக்கும். இருவருக்கும் சமாதானம் செய்யவும், ஆதரவாக இருக்கவும் உதவியாக இருக்கும் என பேசியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version