Home உலகம் இரண்டு வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் கடும் பீதியில் ஜப்பான் மக்கள்

இரண்டு வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் கடும் பீதியில் ஜப்பான் மக்கள்

0

பசுபிக் நெருப்பு வளைய பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளதால் அடிக்கடி அங்கு நிலநடுக்கம் ஏற்படுகிறது.

அதன்படி, அங்குள்ள டோகாரா தீவில் கடந்த 2 வாரங்களில் 900-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளன. இதில் மிகப் பெரிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாகப் பதிவானது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

 பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்

 இந்த நிலையில் எப்போது வேண்டுமானாலும் வெளியேற தயாராக இருக்குமாறு பொதுமக்களை அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது.

இதற்காக, டோகாரா கடற்கரை பகுதியில் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலநடுக்கத்தால் அங்கு வசிக்கும் மக்கள் பீதியில் உறைந்து காணப்படுகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version