Home சினிமா 11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ… வாழ்த்தும் ரசிகர்கள்

11வது வருட திருமண நாள், மிர்ச்சி செந்தில் வெளியிட்ட ஸ்பெஷல் வீடியோ… வாழ்த்தும் ரசிகர்கள்

0

மிர்ச்சி செந்தில்

ரேடியோ மிர்ச்சியில் ஆர்ஜேவாக பணியாற்றியதன் மூலம் பிரபலம் ஆனவர் செந்தில்.

அதில் பிரபலம் அடைந்தவருக்கு சின்னத்திரையில் சீரியல்கள் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நாயகனாக நடித்தார்.

இவருக்கு ஜோடியாக ஸ்ரீஜா நடிக்க இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி சீரியலை சூப்பர் டூப்பர் ஆக்கியது.

சீரியல் மூலம் அவர்களுக்கு ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அப்படியே நிஜத்தில் திருமணம் வரை முடிந்தது.
தற்போது மிர்ச்சி செந்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா தொடரில் நாயகனாக நடித்து வருகிறார்.

ஸ்பெஷல் வீடியோ

இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் மிர்ச்சி செந்தில் தற்போது குடும்பத்துடன் எடுத்த அழகிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதாவது மிர்ச்சி செந்தில்-ஸ்ரீஜா திருமணம் செய்து 11 வருடங்கள் ஆகிவிட்டனவாம், தனது மனைவி மற்றும் மகனுடன் எடுத்த அழகிய போட்டோக்களுடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இந்த அழகிய ஜோடிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். 

NO COMMENTS

Exit mobile version