Home உலகம் ஜஸ்டின் ட்ருடோவின் பதவி விலகல்: கேள்விக்குறியாகுமா கனடா..!

ஜஸ்டின் ட்ருடோவின் பதவி விலகல்: கேள்விக்குறியாகுமா கனடா..!

0

ஒன்பது ஆண்டுகளாகக் கனடா பிரதமராக பதவி வகித்து வந்த ஜஸ்டின் ட்ருடோவின்(Justin Trudeau), பதவி விலகல் அறிவிப்பு அந்நாட்டின் எதிர்காலத்தை பாதிக்குமா என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்றைய தினம்(07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் தனது பதவி விலகலை அறிவித்துள்ளார். 

கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கனடா நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற ஜஸ்டின் ட்ரூடோ, ஒரு காலத்தில் கனடா நாட்டு மக்கள் விரும்பும் தலைவராக
காணப்பட்டுள்ளார்.

ட்ருடோவின் பதவி விலகல்

தாராளமயக் கொள்கைக்காக ஆரம்ப கட்டத்தில் அவர் பாராட்டப்பட்டாலும், பணவீக்கம் அதிகரிப்பு , வீட்டுவசதி நெருக்கடி, வெளிநாட்டினர் குடியேற்றம் அதிகரிப்பு போன்ற பிற பிரச்சினைகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களிடையே அவருக்கு இருந்த செல்வாக்கு குறைந்துள்ளது.

இந்நிலையில், உள்நாட்டு அரசியல் நெருக்கடி மற்றும் மக்களிடையே குறைந்த ஆதரவு போன்ற காரணிகளினால் ட்ரூடோ பதவி விலகியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, நேற்று உரையாற்றிய ஜஸ்டின் ட்ருடோ,“கட்சி தனது அடுத்த வலுவான தலைவரை, நாடு தழுவிய தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்த பிறகு, நான் கட்சித் தலைவர் பதவியையும், பிரதமர் பதவியையும் விட்டு விலக விரும்புகிறேன்.

அடுத்த பிரதமர் தெரிவு

நான் கட்சிக்குள்ளேயே போரிட வேண்டியிருந்தால், அந்தத் தேர்தலில் நான் சிறந்த தேர்வாக இருக்க முடியாது என்பது எனக்குத் தெளிவாகிவிட்டது.

நமது கட்சிக்கும் நாட்டிற்கும் மிகவும் முக்கியமான விஷயங்களுக்காகப் போராடுவதில் இருந்து எப்போதும் பின்வாங்க மாட்டேன் என்பதுடன் கனேடியர்களின் நலன்களுக்காவும் ஜனநாயகத்தின் நலனுக்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, லிபரல் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினரான அனிதா ஆனந்துக்கு கனடாவின் அடுத்த பிரதமராகும் வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version