Home உலகம் இஸ்ரேல் ராணுவத்தை திணற வைத்துள்ள ஹமாஸ்: கொத்தாக பலியாகும் IDF வீரர்கள்

இஸ்ரேல் ராணுவத்தை திணற வைத்துள்ள ஹமாஸ்: கொத்தாக பலியாகும் IDF வீரர்கள்

0

வடக்கு காசா பகுதியில் நடந்த சண்டையில் மூன்று இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், நான்கு பேர்  படுகாயமடைந்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) அறிவித்துள்ளது.

இன்று அதிகாலை நடந்த சண்டையின் போது ஒரு IDF வீரர் கொல்லப்பட்டுள்ளதுடன், மற்றைய இரண்டு வீரர்களும் நேற்றையதினம் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

கொல்லப்பட்டவர்கள்

அதன்போது, ஜெருசலேமைச் சேர்ந்த மேஜர் டிவிர் சியோன் ரேவா (28) மற்றும் எலியை சேர்ந்த Cpt.எய்டன் இஸ்ரேல் ஷிக்னாசி (24) ஆகிய வீரர்களே நேற்றையதினம் கொல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை, இன்று அதிகாலை நடந்த சண்டையின் போது கனேய் டிக்வாவைச் சேர்ந்த ஸ்டாஃப் சார்ஜென்ட். இடோ சமியாச் (20) என்பவருமே கொல்லப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கொல்லப்பட்டவர்கள், நஹல் படைப்பிரிவின் 932 வது பட்டாலியனில் கமாண்டர்களாகவும், உளவுப் பிரிவில் சார்ஜன்டாகவும் பணியாற்றியுள்ளனர்.

இஸ்ரேலின் இழப்பு எண்ணிக்கை

இதன்படி, குறித்த மரணங்கள், காசாவில் ஹமாஸுக்கு எதிரான தரைவழித் தாக்குதலிலும், எல்லைப் பகுதியுடனான இராணுவ நடவடிக்கைகளிலும் இஸ்ரேலின் எண்ணிக்கையை 398 ஆக உயர்த்தியுள்ளது.   

மேலும், நஹால் படைப்பிரிவில் படுகாயமடைந்த வீரர்கள் சிகிச்சைக்காக இஸ்ரேலுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கபட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version