Home இலங்கை அரசியல் இலங்கைக்கு வரவுள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்! வெளியானது தகவல்

இலங்கைக்கு வரவுள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர்! வெளியானது தகவல்

0

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதன்படி, அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு யோகோ கமிகாவா இலங்கைக்கு வரவுள்ளார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி ஜப்பானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யொஷிமஸா இலங்கைக்கு பயணம் செய்திருந்த நிலையிலேயே, தற்போது யோகோ கமிகாவாவின் இலங்கைக்கான பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இலங்கை பயணம்

இதன் போது, கொழும்பு துறைமுகத்துக்கான கண்காணிப்பு விஜயமொன்றை ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் மேற்கொள்ளவுள்ளார். 

தமிழகத்தில் வீசப்போகும் வெப்ப அலை! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இதனை தொடர்ந்து, அதிபர் ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை அவர் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி ஒப்பந்தம் குறித்தும் இந்த சந்திப்புக்களின் போது யோகோ கமிகாவா கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை, இலங்கையை தொடர்ந்து எதிர்வரும் 4 ஆம் திகதி யோகோ கமிகாவா நேபாளத்துக்கு பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்கிய அமெரிக்கா!

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version