Home இலங்கை பொருளாதாரம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஜப்பானின் அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஜப்பானின் அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பம்

0

Courtesy: Sivaa Mayuri

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாம் கட்டம், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவன ஆதரவுடன் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (01) பிற்பகல் ஜப்பானின் ஜெய்க்காவின் பிரதம பிரதிநிதி யமடா டெட்சுயாவிற்கும் ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

ஜப்பானின் திட்டங்கள்

மேலும், ஜெய்க்காவினால் நிதியளிக்கப்படும் மற்றொரு முன்முயற்சியான டெரெஸ்ட்ரியல் டெலிவிசன் பிரொட்காஸ்ட் டிஜிட்டலைசேசன் திட்டத்தையும் உடனடியாக ஆரம்பிப்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜப்பானிய தூதுவரும், அண்மையில், இலங்கையில் ஜப்பானின் 11 திட்டங்களை விரைவில் முடிக்கவேண்டிய அவசரத்தை வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version