Home உலகம் முற்றுகிறது முறுகல் : எலோன் மஸ்க்கிற்கு அமெரிக்க துணை ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை

முற்றுகிறது முறுகல் : எலோன் மஸ்க்கிற்கு அமெரிக்க துணை ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை

0

 ”எலோன் மஸ்க்(elon musk) உணர்ச்சிவசப்படுகிறார். அவர் தனது அமைதியை இழந்துவிட்டார்” என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ்(jd. vance) கடுமையாக சாடியுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் (donald trump)மற்றும் தொழிலதிபர் எலோன் மஸ்க் இடையே உள்ள மோதல் குறித்து துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளதாவது,

அவர் தனது அமைதியை இழந்துவிட்டார்

எலோன் மஸ்க் கொஞ்சம் அமைதியாக இருந்தால் எல்லாம் சரியாகிவிடும் என நான் நினைக்கிறேன். ஜனாதிபதி ட்ரம்ப் குறித்து எலோன் மஸ்க் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவுகள் பெரிய தவறு.

அவர் உணர்ச்சிவசப்படுகிறார். அவர் தனது அமைதியை இழந்துவிட்டார். ஒரு காலத்தில் நெருங்கிய கூட்டாளிகள். தற்போது எலோன் மஸ்கின் செயல், நாட்டிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அது அவருக்கும் நல்லது அல்ல என்று நான் நினைக்கிறேன். எலோன் மஸ்க் மீண்டும் ட்ரம்புடன் கூட்டணிக்கு வருவார் என்று நம்புகிறேன்.

ட்ரம்ப் ஒரு நல்ல வேலையைச் செய்கிறார்

 

எலோன் மஸ்க் எதிர்க்கும் சட்டம் செலவினங்களைக் குறைப்பது மட்டுமல்ல. இது ஒரு நல்ல சட்டம் ஆகும். ஆயிரக்கணக்கான வேலை இழப்புகளுக்கு வழிவகுத்த போதிலும், செலவுகளைக் குறைத்த எலோன் மஸ்க் செயல் பாராட்டுக்குரியது.

அவர் ஒரு சிறந்த தொழில்முனைவோராக திகழ்ந்தார். ட்ரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எலோன் மஸ்க் கூறியது முற்றிலும் பைத்தியக் காரத்தனமானது. ஜனாதிபதி ட்ரம்ப் ஒரு நல்ல வேலையைச் செய்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

NO COMMENTS

Exit mobile version