Home உலகம் ட்ரம்ப் விதித்த பயணத் தடை : ஈரான் கடும் சீற்றம்

ட்ரம்ப் விதித்த பயணத் தடை : ஈரான் கடும் சீற்றம்

0

ஈரான்(iran) உட்பட 12 நாடுகளின் குடிமக்களுக்கு அமெரிக்கா(us) பயணத் தடை விதித்திருப்பது, அந்நாட்டின் இனவெறி மனநிலையின் அடையாளம் என்று ஈரான் விமர்சித்துள்ளது.

ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாய், இஸ்லாமிய குடியரசின் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய தடைகளை கண்டித்துள்ளார், அவை ஈரானிய தேசத்தின் மீது வோஷிங்டனின் வேரூன்றிய விரோதத்தைக் காட்டுகின்றன என்று குறிப்பிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதியின் புதிய பயண தடை உத்தரவு வரும் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகின்றது.

இனவெறி மனநிலையின் தெளிவான அடையாளம்

“ அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களிடையே இருக்கும் மேலாதிக்க மற்றும் இனவெறி மனநிலையின் தெளிவான அடையாளம் இது. இந்த முடிவு, அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள், ஈரான் மற்றும் முஸ்லிம் மக்கள் மீது கொண்டுள்ள ஆழ்ந்த விரோதப் போக்கைக் காட்டுகிறது.

சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை இது மீறுகிறது. கோடிக்கணக்கான மக்கள், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்லது எந்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் என்பதன் அடிப்படையில் பயணிக்கும் உரிமையை இது பறிக்கிறது.

தடை பாரபட்சமானது

இந்தத் தடை பாரபட்சமானது. தடைக்கான காரணம் பற்றி விரிவாகக் கூறாமல் தடை விதித்திருப்பது, அமெரிக்க அரசாங்கத்தின் சர்வதேசப் பொறுப்புக்கூறலை கேள்விக்கு உட்படுத்துகிறது” எனவும் ஈரான் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version