Home இலங்கை நோபல் பரிசு வென்ற அமெரிக்க பொறியியலாளருடன் ஜீவன் சந்திப்பு!

நோபல் பரிசு வென்ற அமெரிக்க பொறியியலாளருடன் ஜீவன் சந்திப்பு!

0

நோபல் பிரிசு வென்ற அமெரிக்க பொறியியலாளரான பேராசிரியர் மற்றும் அவரின் குழுவினருடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

வொஷிங்டனில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி குழுமத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான கோடைக்கால கூட்டத்தொடரின் போதே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இச்சந்திப்பின் போது மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலானது அறிவுப்பூர்வமானதாகவும் மற்றும் மிகவும் பயனுள்ளதாகவும் அமைந்துள்ளதாக ஜீவன் தெரிவித்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சி 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பொருளாதார வளர்ச்சி விவகாரத்தில் பேராசிரியரின் அளப்பரிய பணிக்காகவே 2019 இல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

வறுமையின் கோரப்பிடியில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் மீள்வதற்காக பேராசிரியர் ஆற்றிய மகத்தான பணிகள் பற்றி அறிந்துகொண்டதுடன் அதற்கான அணுகுமுறைகள் பற்றியும் அவர் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் வாழும் ஒரு மில்லியன் மக்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்தல் மற்றும் பெருந்தோட்ட துறை மறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்களை செய்வதற்கான அணுகுமுறைகள் பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டது” என தெரிவித்துள்ளார்.

Source: https://ibctamil.com/article/jeevan-met-nobel-prize-winning-american-engineer-1713788350

NO COMMENTS

Exit mobile version