ஜனாதிபதியை விமர்சனம் செய்து அரசியல் இலாபம் தேட வேண்டியதில்லை என இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவித்துள்ளார்.
அத்தோடு, கட்சி பேதமின்றி பொருளாதாரத்தை நிலைநாட்ட வேண்டுமானால் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொகவந்தலாவ (Bogawantalawa) கெர்க்கஸ்வோல்ட் தோட்டபகுதியில் நேற்றையதினம் (18) நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரக்கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
பொருளாதார நெருக்கடி
குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ நாட்டில் மீண்டுமொரு
பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் நாட்டு மக்கள் பாரிய கஸ்டத்தை எதிர்நோக்க
நேரீடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நோர்வூட்
பிரதேசசபையின் முன்னாள் தலைவர் ரவிகுழந்தைவேல் (Ravikushanthivel), இலங்கை தொழிலாளர் காங்ரஸின்
இளைஞர் அணியின் பொகவந்தலாவ அமைப்பாளர் இளையராஜா (Ilayaraja), நோர்வூட் பிரதேச சபையின்
முன்னாள் உறுப்பினர்கலான மாடசாமி சரோஜா பிரபு (Madaswamy Saroja Prabhu), மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி (Krishnamurthy) மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/jeevan-thondaman-about-srilanka-economy-1729334360
