Home இலங்கை சமூகம் இந்தியாவில் ஜீவன் தொண்டமானின் பிரமாண்ட திருமணம்! வெளியாகியுள்ள புகைப்படங்கள்

இந்தியாவில் ஜீவன் தொண்டமானின் பிரமாண்ட திருமணம்! வெளியாகியுள்ள புகைப்படங்கள்

0

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமணம் இன்று (23) இந்தியாவில் நடைபெற்றுள்ளது.

இந்தியாவின் தமிழ்நாட்டின் திருப்பத்தூரில் உள்ள ஒரு பெரிய விழா மண்டபம் மற்றும் கோவிலில் நடைபெற்றுள்ளது.

இந்திய மருத்துவரான சீதா ஸ்ரீ நாச்சியார் என்பவரை நாடாளுமன்ற உறுப்பினர் திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

பலர் திருமண விழாவிற்கு அழைப்பு

அவர் தமிழகத்தின் முன்னாள் துணை சபாநாயகர் வி.பி. துரைசாமியின் மகள் ஆவார்.

முன்னாள் ஜனாதிபதிகள் ரணில் விக்ரமசிங்கே மற்றும் மகிந்த ராஜபக்ச உட்பட இலங்கை அரசியல்வாதிகள் பலர் திருமண விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

  

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக கடந்த (20) திகதி மனைவியுடன் முன்னரே இந்தியாவின் தமிழ்நாட்டுக்குச் சென்றுள்ளதுடன், பல இலங்கை அரசியலவாதிகள் ஜீவன்  தொண்டமானின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்கதக்து. 

  

NO COMMENTS

Exit mobile version