Home இலங்கை அரசியல் நுவரெலியாவில் இதுவரை இடம்பெற்ற வாக்குப் பதிவு : வெளியான அறிவிப்பு

நுவரெலியாவில் இதுவரை இடம்பெற்ற வாக்குப் பதிவு : வெளியான அறிவிப்பு

0

நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்தில் இதுவரை 10% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை நுவரெலியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி/ மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) காலை மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது.

வாக்குப் பதிவு

மலையகத்தை பொறுத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பதிவு செய்வதை காணக்கூடியதாக இருக்கின்றது.

அதேவேளை, பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு வெளிநாட்டு சர்வதேச கண்காணிப்பாளர்களும் தங்களது பார்வையை செலுத்தி வருகின்றனர்.

இதனடிப்படையில், காலை எட்டு மணி வரையான காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் 10% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாக்களிக்க தகுதி பெற்றுள்ளோர்

இதேவேளை மலையக பெருந்தோட்ட மக்கள் அனைவரும் வாக்களிப்பு
நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 6 இலட்சத்து 5,292 பேர் வாக்களிக்க தகுதி
பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 347,646 வாக்காளர்களும்,  கொத்மலை தேர்தல் தொகுதியில் 88219 வாக்காளர்களும், வலப்பனை தேர்தல் தொகுதியில் 90,990 வாக்காளர்களும், ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியில்
78,437 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நீதியாக இடம்பெறும் வாக்களிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள்
வாக்களிக்கவுள்ளனர்.

மேலும், 52 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்களிப்பு நிலையங்களில் 8500 பேர் கடமையில் ஈடுபட்டுள்ளதோடு,
பாதுகாப்புக்காக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் 1748 பேர் கடமையில்
ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல் மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை போன்ற பகுதிகளிலும் ஊவா
மாகாணத்தில் பதுளை, பண்டாரவளை ஆகிய பகுதிகளிலும் வாக்களிப்பு மிகவும்
நீதியாகவும் சுதந்திரமான முறையிலும் நடைபெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பு
அமைப்புகள் தெரிவிக்கின்றன.

NO COMMENTS

Exit mobile version