Home சினிமா எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவானந்தம் பார்கவி இறந்துவிட்டனர்.. அதிர்ச்சியில் ஜனனி மற்றும் பெண்கள்

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவானந்தம் பார்கவி இறந்துவிட்டனர்.. அதிர்ச்சியில் ஜனனி மற்றும் பெண்கள்

0

எதிர்நீச்சல் தொடர்கிறது

பார்கவி மற்றும் ஜீவானந்தம் இருவரின் கதையையும் முடிந்துவிட்டதாக அறிவுக்கரசிக்கு போன்கால் செய்து புலிகேசி கூற, மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறாள் அறிவுக்கரசி.

இதையடுத்து, இந்த விஷயத்தை ஆதி குணசேகரனிடம் அறிவுக்கரசி சொல்கிறாள். சொன்னதைப்போல் ஜீவானந்தம் கதையை முடித்துவிட்டுதான் இந்த கல்யாணம் நடக்கும் என சொன்னேன், அதே போல் இந்த கல்யாணம் நடக்கப்போகிறது என அறிவுக்கரசி மகிழ்ச்சியடைகிறாள்.

முத்து சிறுவர் சீர்திருத்த பள்ளி செல்ல என்ன காரணம்? பரபரப்பான சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ

இன்றைய எபிசோட்

புலிகேசி செய்தியாளர்களிடம் ஜீவானந்தம் மற்றும் பார்கவி இருவரையும் சுட்டுக்கொன்று விட்டதாக அறிவிக்கிறார். ஆனால், அவர்களுடைய உடல் கிடைக்கவில்லை. தேடிக்கொண்டு இருக்கிறோம் என கூறுகிறார்.

மேலும், ஜீவானந்தம் என்பவர் ஏற்கனவே பலவிதமான சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டதால் அவரை சுட்டு பிடிக்க எங்களுக்கு உத்தரவு வந்தது. அதை தொடர்ந்து நாங்கள் அந்த பகுதியில் தேடி சென்ற பொது, இரண்டு பேரையும் சுட்டுக்கொன்று விட்டோம். விரைவில் அவர்களின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு உங்களிடம் காட்டுகிறோம் என கூறினார்.

செய்தியாளர்களிடம் புலிகேசி பேசியதை தொலைக்காட்சி வாயிலாக பார்த்துக்கொண்டிருந்த நந்தினி, தர்ஷினி, ஜனனி என அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டனர். இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்பதைப்பொறுத்திருந்து பார்ப்போம்.

NO COMMENTS

Exit mobile version