இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர்( S. Jaishankar) நாடு திரும்பியுள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அவர் இந்தியா புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒருநாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஜெய்சங்கர் இன்று(20.06.2024) இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.
மோடியின் இலங்கை விஜயம்
இதன் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் செய்ய உள்ள நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.