Home சினிமா சூப்பர்ஸ்டார் படத்தில் வில்லனாக நடிக்கவிருந்த நடிகர் ஜீவா.. நிராகரித்த காரணம் என்ன தெரியுமா

சூப்பர்ஸ்டார் படத்தில் வில்லனாக நடிக்கவிருந்த நடிகர் ஜீவா.. நிராகரித்த காரணம் என்ன தெரியுமா

0

அகத்தியா

தமிழ் சினிமாவில் பிரபலமான ஹீரோவாக இருக்கும் ஜீவா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் அகத்தியா. இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக தொடர்ந்து பல பேட்டிகளில் கலந்துகொண்டு பேசினார்.

அதில் பல சுவாரஸ்யமான தகவல்களையும் அவர் பகிர்ந்துகொண்டார். அப்படி அவர் பகிர்ந்துகொண்ட விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார் மோகன்லாலின் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்தும் அதை நிராகரித்ததாக அவர் கூறியுள்ளார்.

சப்தம் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

ஒப்பன் டாக்

அந்த பேட்டியில் பேசிய அவர் “லிஜோ ஜோஸ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ஆனால், கெட்டப் எனக்கு பிடிக்கவில்லை என கூறி அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டேன்.

எனக்கு எக்கச்சக்கமான இயக்குநர்கள் பல படங்களில் நடிக்க அழைத்துள்ளனர். ஆனால் பாதி மொட்டை, பாதி மீசை இல்லாமல் கெட்டப் இருந்தது. இதெல்லாம் நான் பண்ண வீட்டில் சேர்க்க மாட்டார்கள் என கூறி நிகரித்துவிட்டேன்” என ஜீவா பேசியுள்ளார். 

மோகன்லால் உடன் இணைந்து நடிகர் ஜீவா ‘அரண்’ எனும் திரைப்படத்தில் 2006ல் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version