விஜய் டிவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் பலவும் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அப்படி ஹிட்டாக ஓடிய நிகழ்ச்சிகளில் ஒன்று தான் டான்ஸ் ஜோடி டான்ஸ் மற்றும் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சிகள்.
நடனத்தை அடிப்படையாக கொண்டு விஜய் டிவியில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக கடந்த வருடம் ஜோடி ஆர் யூ ரெடி என்ற புத்தம் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
20 திறமையான நடன கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்.
இதில் நடன இயக்குனர் சாண்டி, நடிகைகள் மீனா மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் நடுவர்களாக கலந்துகொண்டனர்.
புதிய சீசன்
தற்போது ஜோடி ஆர் யூ ரெடி புதிய சீசன் விரைவில் தொடங்கவுள்ளது. அதற்கான புகைப்படங்கள் வெளியாகி வருகிறது, இந்த முறை நடுவர்களில் மீனா இடம்பெறவில்லை என புகைப்படம் பார்க்கும் போது தெரிகிறது.