Home இலங்கை அரசியல் ஜோ பைடனுக்கு அறுவை சிகிச்சை

ஜோ பைடனுக்கு அறுவை சிகிச்சை

0

தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

82 வயதான முன்னாள் ஜனாதிபதி நீண்ட காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் முன்னாள் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி முன்னதாக ஜோ பைடன் 2023 இல் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

நெற்றியில் ஒரு பெரிய வடு

மேலும் அவரது நெற்றியில் ஒரு பெரிய வடு இருப்பதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

எனினும், பைடன் எப்போது இந்த அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார் அல்லது எந்த வகையான தோல் புற்றுநோய் அகற்றப்பட்டது என்பதை ஸ்கல்லி வெளியிடவில்லை .

மேலும், பைடனின் மூத்த மகனும் 2015 இல் புற்றுநோயால் இறந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version