Home முக்கியச் செய்திகள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

0

புதிய இணைப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.   

முதலாம் இணைப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ(Johnston Fernando) கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று(30) முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

அவர், பதிவு செய்யப்படாத பி.எம்.டபிள்யூ(BMW) ரக காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

விளக்கமறியல் உத்தரவு

சர்வதேச காவல்துறை தரவுகளின் படி சம்பந்தப்பட்ட பி.எம்.டபிள்யூ காரின் சேசி எண்ணை சோதனை செய்தபோது, ​​இது 2021ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து திருடப்பட்ட கார் என்பது தெரியவந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்று வரை (30) ​​விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி உத்தரவிட்டது.

அன்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்ட முன்னாள் அமைச்சரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்ட குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் முன்னாள் அமைச்சரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version