Home இலங்கை அரசியல் மொட்டுக்கட்சியின் முக்கிய பதவிக்கு ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

மொட்டுக்கட்சியின் முக்கிய பதவிக்கு ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

0

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ (Johnston Fernando) நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (09) நடைபெற்ற கட்சியின் விசேட கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.

அதேநேரம், உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பதற்காக முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் (Gamini Lokuge) தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி

அத்துடன் , உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியை நிறுவுவதற்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கான குழுவை சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி நியமித்திருந்தது.

கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், புதிய செயற்பாட்டு பிரதானி ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக செயற்பட்டு வருகின்றனர்.

இதேவேளை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் கட்சிக் கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தலைமையில் அவரது கொழும்பு (Colombo) விஜேராம இல்லத்தில் நேற்று (09) நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version