Home இலங்கை அரசியல் நாமல் ஜனாதிபதியானால் பிரதமர் பதவி யாருக்கு… உதயங்க வீரதுங்க வெளியிட்ட தகவல்

நாமல் ஜனாதிபதியானால் பிரதமர் பதவி யாருக்கு… உதயங்க வீரதுங்க வெளியிட்ட தகவல்

0

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் அவரது தலைமையில் உருவாக்கப்படும் அரசாங்கத்தில் பிரதமர் பதவி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கே (Johnston Fernando) வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விடயத்தினை ரஷ்யாவுக்கான (Russia) முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க (Udayanga Weeratunga) தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றிற்கு இன்று (16) வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை பின்தள்ளும் முயற்சி

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் ”வெற்றி பெறுவதற்கு முன்னரே பதவிகள் தொடர்பில் கட்சிக்குள் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.

இந்தநிலையில், தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழிவகைகள் குறித்து ஆராயப்படுகின்றன.

எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) பின்தள்ளும் முயற்சியிலேயே சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) இறங்கியுள்ளது.

எவ்வாறாயினும், புதிய ஆய்வுகளின்படி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) முன்னிலையில் இருக்கின்றார் ” என உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version