Home இலங்கை அரசியல் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்றையதினம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. 

நீதிமன்றின் உத்தரவு

பதிவு செய்யப்படாத சொகுசு வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில்  இந்த பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் பயன்படுத்திய வாகனம், ஜேர்மனியில் தயாரிக்கப்பட்டு, இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு இந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் பதிவு செய்யப்படாத இலக்கத்தில் பயணித்ததாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்தவற்றை சுட்டிக்காட்டி கோட்டை நீதிவான் தனுஜா லக்மாலி இந்த  தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த காரை இலங்கைக்கு கொண்டு வந்தவர்கள் யார், எப்போது, ​​யார் பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version