Home முக்கியச் செய்திகள் மொட்டுவின் முன்னாள் அமைச்சருக்கு வழங்கப்பட்ட 08 துப்பாக்கிகள்

மொட்டுவின் முன்னாள் அமைச்சருக்கு வழங்கப்பட்ட 08 துப்பாக்கிகள்

0

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ(johnston fernando) கடந்த அரசாங்கத்திடம் இருந்து 8 துப்பாக்கிகளை பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி AF 408 – 9mm cz 75, AHIBT 219 – 9mm Glock, ESM 893 – 9mm Glock, 24SLG2-0002 – 12Bore Repeater, 24SLG2-0151 – 12 Bore Repeater – 12410, 2400 2/240888 – 12 போர் ரிப்பீட்டர், 15333989 – ஆகிய 8 துப்பாக்கிகள் பாதுகாப்பு அமைச்சகத்தால் வழங்கப்பட்டன.

அவன்கார்ட் தலைவருக்கும் வழங்கப்பட்ட துப்பாக்கி

மேலும், அவன்கார்ட் என்ற கடல்சார் பாதுகாப்பு நிறுவனத்தை நடத்தி வந்த நிஷ்ஷங்க சேனாதிபதி, கடந்த அரசாங்கத்திடம் இருந்து 9 துப்பாக்கிகளை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிகளில் 7 பிஸ்டல்கள் (9 மிமீ) மற்றும் 2 போர் ரிப்பீட்டர்கள் உள்ளன.

தற்காப்புக்காக பிரஜைகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களை மீளப் பெறுவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, உரிமம் பெற்றவர்கள் அனைவரும், துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்கான வெடிபொருட்களை நவம்பர் 07 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை கடற்படையின் வெலிசரவில் உள்ள அரச வர்த்தக வெடிபொருள் களஞ்சியசாலையில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டது.

மகிந்தவின் புதல்வரிடம் 07 துப்பாக்கிகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்சவிற்கு கடந்த அரசாங்கத்தினால் 07 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிஸ்டல் துப்பாக்கிகளை பெற்றுள்ள முன்னாள் எம்.பி.க்களின் எண்ணிக்கை 110 ஆகும். ஆனால் பெரும்பான்மையான முன்னாள் எம்.பி.க்கள் துப்பாக்கிகளை இன்னும் ஒப்படைக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version